4 கூரை வீடுகள் எரிந்து நாசம்

திருத்துறைப்பூண்டி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

Update: 2023-04-15 19:00 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

தீப்பிடித்தது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சிக்குட்பட்ட கண்ணந்தங்குடி கிராமத்தை சோ்ந்தவர் செல்வம் (வயது 40). நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் இவரது கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறியது.

ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்

இதனால் அருகே இருந்த பாலசுப்பிரமணியன், அன்னப்பட்டு, சரவணன், ஆகிய 3 பேரின் கூரை வீடுகளுக்கும் தீ பரவி அந்த வீடுகளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீைர பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, டி.வி, மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. முதலில் செல்வத்தின் வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்