சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து

சென்னையில் இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-30 09:17 GMT

சென்னை,

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல் போதிய பயணிகள் இல்லாததால் இன்று மாலை 4:30 மணிக்கு, சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானம் கோவையில் இருந்து இன்று பகல் 12:45 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானம், மாலை 3:15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து, சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்