2 நாட்களில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ.4½ கோடிக்கு மனு விற்பனை செய்யப்பட்டது கடந்த ஆண்டை விட ரூ.69½ லட்சம் அதிகமாக விற்பனையாகி உள்ளது.

Update: 2023-01-02 18:45 GMT

புத்தாண்டையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களில் ரூ.4½ கோடிக்கு மனு விற்பனை செய்யப்பட்டது கடந்த ஆண்டை விட ரூ.69½ லட்சம் அதிகமாக விற்பனையாகி உள்ளது.

பண்டிகை காலங்களில் அலைமோதும் கூட்டம்

பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிகளவில் மதுபானம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.

அதன்படி ஏராளமான வகையில் மதுபாட்டில்கள் கடைகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக புத்தாண்டு தினத்தில் மதுபிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி செல்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

ரூ.4 கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 102 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் புத்தாண்டையொட்டி கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31- ந்தேதி அன்று ரூ.2 கோடியே 19 லட்சத்து 21 ஆயிரத்துக்கும், மறுநாள் 1-ந்தேதி அன்று ரூ.2 கோடியே 30 லட்சத்து 93 ஆயிரத்து 830-க்கும் என மொத்தம் ரூ.4 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட ரூ.69 லட்சத்து 66 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்