சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள்

கீரிப்பாறை லேபர் காலனி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் 4 கேமராக்கள் வைத்துள்ளனர்.

Update: 2023-07-27 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

கீரிப்பாறை லேபர் காலனி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் 4 கேமராக்கள் வைத்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்று குட்டிகள், 2 வாத்துகளை வேட்டையாடியது.

பின்னர் ஒரு நாயையும் கவ்வி சென்றதால் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த பகுதியில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் சிறுத்தையின் அட்டகாசத்தை கண்டு பீதியில் உள்ளனர். இதற்கிடையே அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் தலைமையிலான வன ஊழியர்களும் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதியில் பதிவாகியிருந்த காலின் தடத்தை ஆய்வு செய்ததில் சிறுத்தை தான் என்பதை உறுதி செய்தனர்.

தீயை மூட்டும் வனத்துறையினர்...

இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் சிறுத்தை மீண்டும் அந்த இடத்திற்கு வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதாவது 6 பேர் கொண்ட குழுவினர் அந்த பகுதியில் இரவு நேரத்தில் நோட்டமிட்டு தீயை மூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் இரவே தீயை மூட்டினர். இவ்வாறு செய்தால் சிறுத்தை அந்த பகுதிக்கு வராது. இரவு நேரம் மற்றும் அதிகாலை என 2 தடவை குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்துள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்காணிப்பு கோமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்