அரிவாள்களுடன் 4 சிறுவர்கள் கைது

திருச்சியில் அரிவாள்களுடன் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-02 19:52 GMT

திருச்சி, சுப்பிரமணியபுரம், காந்தி தெருவை சேர்ந்தவர் ஏ.அந்தோணி சேகர் (வயது 56). சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு, பெண் ஒருவர் பிச்சை எடுத்துள்ளார். அப்போது, பொன்மலைப்பட்டி, மலையடிவாரம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் அவரை கேலி செய்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை அந்தோணி சேகரின் சகோதரர், ராஜேந்திரன் தட்டிக்கேட்டார். இதனையடுத்து 5 பேரும் ஆயுதங்களைக் கொண்டு அவரை தாக்க முயன்றனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து அந்தோணி சேகர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களை கைது செய்தனர். தப்பி ஓடிய ஒரு சிறுவனை தேடி வருகின்றனர். மேலும் அந்த சிறுவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்