4 வெடிகுண்டுகள் பறிமுதல்

4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-10 18:55 GMT

வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்தி கோவில் பகுதியில் சோலையப்பன் என்பவரின் தென்னந்தோப்பில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சோலையப்பனிடம் போலீசார் விசாரித்தபோது, இரவு நேரத்தில் தோட்டத்தில் யாரும் தங்குவதில்லை என கூறியதாக தெரிகிறது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்