8½ கிலோ கஞ்சா கடத்திய தம்பதி உள்பட 4 பேர் கைது

நிலக்கோட்டை அருகே 8½ கிலோ கஞ்சா கடத்திய தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-22 16:40 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து பிரிவில் நிலக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சாவை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள், நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டி பிரிவு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 34), அவரது மனைவி பாண்டிமீனா (32), தங்கை சித்ராதேவி (31), குண்டலபட்டியை சேர்ந்த செண்பகராஜ் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 8½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்