தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

விழுப்புரம் அருகே தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-07-20 18:45 GMT

உளுந்தூர்பேட்டை அருகே இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் நரேஷ்குமார் (வயது 24), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அருகே ஆழாங்கால் குச்சிப்பாளையம் ரெயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சில நபர்கள், நரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். உடனே நரேஷ்குமார் கூச்சலிட்டதால் பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து 4 பேரை மடக்கிப்பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் 4 பேரும் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டை சேர்ந்த பிரதாப் (28), சரத்குமார் (34) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அரசூரை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்