பேரையூர்,
பேரையூர் தாலுகா லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 36). சம்பவத்தன்று இவரது ஆட்டு தொழுவத்தில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போனதை பார்த்து அழகர்சாமியும் அவரது உறவினர்களும் ஆடுகளை தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது சாலையில் மினி வேன் ஒன்று வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தப்பிக்க முயற்சி செய்து உள்ளனர்.அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் ஆடுகளை திருடி உடன் வந்த 2 பேர்களிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.உடனே அழகர்சாமி 2 பேரையும் பிடித்து, பேரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளத்தை சேர்ந்த குபேந்திரன் (34) தங்கப்பாண்டி (37), சமுத்திரம் (39), ராமர் பாண்டி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.