ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-29 19:25 GMT

ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்காணிப்பு

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தலைவர் காமினி உத்தரவுப்படி, மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்பிரியா தலைமையில் மதுரை மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பெருங்குடி பகுதியில் மதுரை சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 930 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாகனத்தில் இருந்த மதுரையை சேர்ந்த கண்ணன், ரமேஷ், ராஜேஷ், கணேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் அந்த ஜீப்பையும் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்