மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-14 18:43 GMT

கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அமைத்துள்ள சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொத்தமங்கலம் பகுதியில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டத்தால் ஒரே நாளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்த அண்ணாமலை (வயது 60), ஸ்டாலின் (52) ஆகிய இருவரை கைது செய்தனர். இதேபோல் மதுவிற்ற தமிழரசன் (48), தென்னரசு (60) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ராஜசேகரன் (45) மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 260 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்