கஞ்சா விற்ற 4 பேர் கைது
உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் உளுந்தாண்டார் கோவில் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பிரதிப் (வயது 22), கோகுல்ராஜ் (19), பவித்ரன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் கஞ்சா விற்றதாக பூ மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.