கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

நொய்யல்-கரூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-26 18:34 GMT

கஞ்சா விற்பனை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கந்தம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் அருகே சுடுகாடு வாய்க்கால் படித்துறை பகுதியில் 2 பேர் பிளாஸ்டிக் பையை கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புகழூர் செந்தூர்நகர் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (வயது 26), வேலாயுதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஷேக்தாவூத் (25) என்பதும், தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 பேர் கைது

கரூர் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ராயனூர் பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரசகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரானூரில் உள்ள காட்டுப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ரத்னகிரீஸ்வரன் (27), கார்த்திக் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்