பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நச்சலூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நேற்று அப்பகுதிக்குச் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது புரசம்பட்டி பாலம் வாய்க்கால் கரையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த நச்சலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 40), பிரகாஷ் (40), முருகன் (37), நெய்தலூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த மலர் கண்ணன் (50) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.200 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.