திண்டுக்கல் நகர் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருச்சி சாலையில் நேருஜிநகர் பகுதியில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 47), முள்ளிப்பாடியை சேர்ந்த ஜோசப் கென்னடி (46), ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (40), கிழக்குராமராதபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (37) என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.