வாலிபர்களிடம் பணம் பறித்த 4 பேர் கைது

வாலிபர்களிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-13 18:38 GMT

கடலூர் மாவட்டம், குமராட்சியை சேர்ந்தவர்கள் ராமர் மகன் சந்துரு(வயது 23), சிவப்பிரகாசம் மகன் குணசேகரன்(24). இவர்கள் இருவரும் கோவையில் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் குமராட்சியில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக கோவை செல்வதற்காக ஜெயங்கொண்டம் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிதம்பரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது , ஜெயங்கொண்டத்தை சேர்ந்த நந்தவேல்(24), மேலக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(22), விஜய்(22), ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த அமர்நீதி மகன் ஜெயமோகன்(22) ஆகியோர் குடிபோதையில் வழிமறித்து அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் ராஜேஷ், நந்தவேல், விஜய், ஜெயமோகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்