பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

பண்ருட்டி பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-30 19:12 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அம்பேத்கர் நகர் மற்றும் ரெயில்வே நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் அருகில் உள்ள பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த சின்ன கள்ளிப்பட்டை சேர்ந்த நவநீதன்(வயது 31), ராஜா(26), சாவடி பாட்டை தெருவை சேர்ந்த மாயவேல் மகன் இளவரசன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேலிருப்பு கிராமத்தில் பொது இடத்தில் மது அருந்தியதாக காடாம்புலியூரை சேர்ந்த பார்த்திபன்(20) என்பவரை காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்