தன்னார்வலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
சங்கராபுரத்தில் தன்னார்வலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி புத்தகம், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா, இல்லம் தேடி கல்வி திட்டம் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர் குப்புசாமி வரவேற்றார். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு புத்தகங்கள், அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் இல்லம் தேடி கல்வி திட்டம் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி, சுரேஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் மலர்கொடி, சரசு, புவனேஸ்வரி, சிறப்பு ஆசிரியர்கள் அரிதாஸ், ஜான் பீட்டர், மேரி, எழில், பாலமுருகன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.