சாலை மறியலில் ஈடுபட்ட 380 பேர் கைது

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-24 17:03 GMT

சாலை மறியல்

தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமையாக்கி, நிதிஉதவிகளை உயர்த்த வேண்டும். அனைத்து வேலைகளுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 240 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியத்தை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியலுக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற் சங்க மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சந்திரமோகன், துணை செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

380 பேர் கைது

இந்த மறியல் போராட்டத்தின் போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தொழிலாளர்கள் கோஷமிட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியலால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் என மொத்தம் 380 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்தசம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்