சார்ஜாவிற்கு கடத்த முயன்ற ரூ.38 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சார்ஜாவிற்கு கடத்த முயன்ற ரூ.38 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-30 21:11 GMT

செம்பட்டு:

கடத்தல் சம்பவங்கள்

திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் சில பயணிகள் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இவற்றை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சுங்கத்துறை அதிகாரிகள் அதிக அளவில், கடத்தப்பட இருந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு பணம் பறிமுதல்

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் மறைத்து கடத்த இருந்த அமெரிக்க டாலர், துபாய் திர்கம், சவுதி ரியால் உள்ளிட்ட ரூ.37.93 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்