38 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

38 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

Update: 2022-12-07 19:18 GMT

மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மரைக்காயர் பட்டினத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அதுபோல் இந்த கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்தை பெருக்கும் வகையில் அவ்வப்போது இறால் மற்றும் நண்டு குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மன்னார் வளைகுடா கடல் பகுதியான சுந்தரமுடையான் அருகே உள்ள சீனியப்பதர்கா கடல் பகுதியில் நேற்று இறால் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய கடலில் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 38 லட்சம் (3.8 மில்லியன்) குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நிகழ்ச்சியில் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்