சேலத்தில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வை 3,700 பேர் எழுதினர்

சேலத்தில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வை 3,700 பேர் எழுதினர்.

Update: 2023-01-29 18:45 GMT

புள்ளியியல் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிகளில் வரும் தமிழ்நாடு பொது துணைநிலை சேவைகள், பொது சுகாதார துணை நிலை சேவைகளின் கீழ் வரும் உதவி புள்ளியியல் ஆய்வாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புள்ளியியல் தொகுப்பாளர் பணியிடங்களில் காலியாக உள்ள 217 இடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது.

இந்த தேர்வு எழுதுவதற்காக சேலம் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் என 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.

3,700 பேர் எழுதினர்

ேதர்வர்கள் தங்களது நுழைவு சீட்டை அதிகாரிகளிடம் காண்பித்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு தேர்வு எழுத சென்றனர். தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்காக 6 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 3 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 150 பேர் தேர்வு எழுத வரவில்லை.

முறைகேடு நடைபெறாத வகையில் அதிகாரிகள் குழு தேர்வு பணியை கண்காணித்தது. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்