மூதாட்டி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை போனது.

Update: 2022-06-03 17:33 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.எஸ்.தக்காவை சேர்ந்தவர் ஹசீனா பேகம்(வயது 65). இவர் விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 36 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்