36 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை

காவேரிப்பாக்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் 36 பேருக்கு அடையாள அட்டைகளை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

Update: 2022-10-21 18:04 GMT

காவேரிப்பாக்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் 36 பேருக்கு அடையாள அட்டைகளை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

அடையாள அட்டை

காவேரிப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெமிலி தாசில்தார் ரவி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், பேரூர் துணை தலைவர் தீபிகாமுருகன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ரேவதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 36 பயனாளிகளுக்கு அடையாள அட்டை, வங்கி கடன், செயற்கை கால் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

வங்கிக்கடனுக்கு விண்ணப்பம்

அப்போது செயற்கைகால் வழங்கப்பட்ட பயனாளியை சிறிது தூரம் நடக்க வைத்து குறைகள் ஏதும் உள்ளதா என கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து முகாம் பகுதியை ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். முகாமில் 274 மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, வங்கிக் கடன் உள்ளிடவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.

மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், ஒன்றியக் குழு தலைவர் அனிதாகுப்புசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், வட்டாரவளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி, மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்