350 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்; 2 பேர் கைது
350 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுகுடியான்பட்டி அருகே உள்ள மின்னடி குளம் அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் உடையாளிப்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்த கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியை சேர்ந்த முத்துசாமி (வயது 45), பாலண்டார் (58) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரங்கசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சோதனையில் 2 பேரல், 3 லிட்டர் கள்ளச்சாராயம், 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், ரூ.3,250, ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.