திண்டுக்கல்லில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-19 21:00 GMT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு புகார் வந்தது. இதையடுத்து நகரில் உள்ள கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர்நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், தட்சிணாமூர்த்தி, ஜெயராணி, சீனிவாசன், முகமது ஹனிபா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மேற்கு ரத வீதியில் உள்ள 6 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 3 கடைகளில், 350 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்