35 கி.மீ. நடந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த இளம்பெண்

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் ஒருவர் 35 கி.மீ. நடந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Update: 2022-11-30 18:45 GMT

கோவை

அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் அக்கரை செங்கம்பள்ளியை சார்ந்த பானு, தனது வீட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சுமார் 35 கி.மீ. தூரம் கையில் பதாகையுடன் நடந்து வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்க 3,731 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக அரசாணை வெளியிட்டிருப்பதாக நாங்கள் அறிந்தோம். இதனால் இந்த பகுதி விவசாய மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். தற்போது தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்த திட்டமானது விவசாயிகளுக்கானதா அல்லது தொழிற்பேட்டைக்கானதா என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொழில்பேட்டை திட்டத்தை ரத்து செய்து, நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்