34-ம் ஆண்டு தொடக்க விழா:45 நலிவடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி-வால்பாறை அமீது வழங்கினார்
34-ம் ஆண்டு தொடக்க விழா:45 நலிவடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி- வால்பாறை அமீது வழங்கினார்
வால்பாறை
வால்பாறையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். தேயிலைத் தோட்ட தொழிலாளர் தொழிற்சங்கத்தின் 34-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலிவடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளா்களின் நலனுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. அதன்படி தனியார் மற்றும் அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தபடி முறையாக சம்பளம் வழங்காததால் ஒவ்வொரு தொழிலாளியும் வருடத்திற்கு ரூ.24 ஆயிரத்து 500 இழப்பை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டும், தொழில்வரி பிடித்தம் செய்வதை நிரந்தரமாக ரத்த செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல் கட்டமாக எஸ்டேட் அலுவலகங்களுக்கு முன்பும், தொடர்ந்து தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டமும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 45 நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நிதியுதவியை வால்பாறை அமீது வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன், அ.தி.மு.க நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா;.
இதேபோல் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் மே தின விழிப்புணர்வு பேரணியும், பழைய பஸ் நிலையம் பகுதியில் தொழிலாளர் தின பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
---------------