சிவகாசி, அருப்புக்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட 346 பேர் கைது

சிவகாசி, அருப்புக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 346 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 22:20 GMT

சிவகாசி, 

சிவகாசி, அருப்புக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 346 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், வேலை இல்லாத திண்டாட்டத்தை ஒழிக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் செய்ய அக்கட்சியினர் முடிவு செய்து இருந்தனர். மறியல் போராட்டத்துக்கு தேவா தலைமை தாங்கினார். முருகன், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். போராட்டம் குறித்து முனியசாமி, உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர்.

136 பேர் கைது

இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 136 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியல் போராட்டத்தால் பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை

அதேபோல அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர, ஒன்றியம், திருச்சுழி தாலுகா கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு தாமஸ், மாவட்ட குழு பூங்கோதை, நகர செயலாளர் காத்தமுத்து, ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் பழைய பஸ் நிலையம் அருகே தொடங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியவாறு அண்ணா சிலை வழியாக பேரணியாக சென்று வங்கி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 108 பெண்கள் உள்பட 210 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக பந்தல்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்