338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை

தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை உள்ளதால் சீனி உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-06 19:41 GMT

தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை உள்ளதால் சீனி உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சர்க்கரை உற்பத்தி

தேசிய அளவில் கடந்த 2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான சர்க்கரை உற்பத்தியாண்டில் முதல் 6 மாதங்களில் மார்ச் 31-ந் தேதி வரை 29.96 மில்லியன் டன் சீனி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 30.9 மில்லியன் டன் சீனி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது என சர்க்கரை உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டமைப்பு கடந்த ஆண்டைவிட தற்போது 4 சதவீதம் சீனி உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 34.12 மில்லியன் டன் சீனி உற்பத்தி செய்யப்பட்டிருந்தநிலையில் தற்போது 29.87 மில்லியன் டன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலைகள் மூடல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 366 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தேசிய அளவில் 194 சர்க்கரை ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 338 ஆலைகள் சர்க்கரை உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சீனி உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளில் ஏப்ரல் மத்தியில் சர்க்கரை உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும் நிலையில் மேலும் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் சீனியின் விலை கிலோ ரூ. 37 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்