32 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-மளிகை கடைக்காரர் கைது

மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 32 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-28 23:36 GMT

பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அம்மன் நகர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 32 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மளிகை கடை உரிமையாளர் மதன் (வயது 35) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்