மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள்

Update: 2022-12-25 19:19 GMT

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

ஆதார் எண்

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் வாரியத்தின் தற்போதைய அறிவிப்பின்படி நகர கோட்டத்திற்குட்பட்ட நீதிமன்றசாலை, மானம்புச்சாவடி, அரண்மனை, அருளானந்தநகர், ஈஸ்வரிநகர், நீலகிரி, மேற்கு பிரிவு மற்றும் கரந்தை பிரிவுகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுடைய வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு மற்றும் கைத்தறி மின் இணைப்பு போன்றவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்டு கொள்கிறோம். ஆதார் எண்ணை பதிவு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

பதிவு செய்ய வேண்டும்

இதனால் இதுவரை ஆதார் எண்ணை பதிவு செய்யாத நுகர்வோர்கள் தங்களுடைய மின் இணைப்பில் ஆதார் எண்ணை மின் கட்டணம் வசூல் செய்யப்படும் பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி ஆதார் எண்ணை பதிவு செய்ய ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களிலும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்