நீலகிரி மாவட்டத்தில் 31,996 பேருக்கு ரூ.89½ கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்-அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

நீலகிரி மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 31,996 பேருக்கு ரூ.89½ கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2023-01-05 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 31,996 பேருக்கு ரூ.89½ கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கடன் தள்ளுபடி சான்றிதழ்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் 2,481 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 25,533 பேருக்கு ரூ.69.7 கோடி, கூட்டுறவு நகர வங்கி மூலம் 69 குழுக்களை சேர்ந்த 497 பேருக்கு ரூ.1.87 கோடி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 590 குழுக்களை சேர்ந்த 5,589 பேருக்கு ரூ.17.60 கோடி, மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 39 குழுக்களை சேர்ந்த 377 பேருக்கு ரூ.99 லட்சம் என மொத்தம் 3,179 குழுக்களை சேர்ந்த 31,996 பேருக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த தள்ளுபடி சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் அடுத்த எடப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை வரை அடகு வைத்துள்ள கடன்தாரர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்து ஆணை வழங்கப்பட்டது.

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ரூ.70.57 கோடி நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டு, 20,838 பேர் பயனடைந்து உள்ளனர். அதேபோல் ரூ.232 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வங்கி கடன் அளிக்கப்பட்டு வருகிறது.

எடப்பள்ளி கிராமத்தில் கூட்டுறவு சங்கம் மூலமாக ரூ.4. கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், புதிதாக ரூ.4.50 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டும் உள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்து சிதம்பரம், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சங்கர நாராயணன், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் குமார சுந்தரம், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்