சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 31 பேர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 52), விவசாயி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. இந்தநிலையில் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வி.கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பா.ஜனதாவினர் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.