மக்கள் நீதிமன்றத்தில் 3028 வழக்குகளுக்கு தீர்வு

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,028 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-13 21:13 GMT

சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குமரகுரு தலைமை தாங்கி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி குமரேசன், மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி அன்புசெல்வி, தலைமை குற்றவியல் நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, நீதிபதிகள் இசக்கியப்பன், மோகன்ராம் செந்தில்முரளி, சுப்பையா, சந்தானம், வள்ளியம்மா, மாஜிஸ்திரேட்டுகள் திருவேனி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் காமராஜ் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற தாலுகா கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மொத்தம் 26 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல், காசோலை மோசடி, சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட 6,045 வழக்குகள் மற்றும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய 350 வங்கி கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 2,949 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டு ரூ.18 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 625 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. இதேபோல் 79 வங்கி கடன் வழக்குகளில் ரூ.69 லட்சத்து 3 ஆயிரத்து 60-க்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 3,028 வழக்குகளில் ரூ.19 கோடியே 36 லட்சத்து 59 ஆயிரத்து 685 சமரச ெதாகைக்கு தீர்வு காணப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்