அறுவடைக்கு தயாரான 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

மணல்மேடு பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Update: 2022-08-25 18:21 GMT

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

குறுவை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் நிலத்தடி நீரைக் கொண்டு மின் மோட்டார் மூலம் முன்கூட்டியே குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கினர். காவிரி நீரும் முன்னதாக வந்ததால் குறுவை நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வந்தன.இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிழாய், வில்லியநல்லூர், கொண்டல், மல்லியகொல்லை, இளந்தோப்பு, தலைஞாயிறு, வக்காரமாரி உள்ளிட்ட 25-க்கும்மேற்பட்ட கிராமங்களில் நவீன எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மணல்மேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. நேற்று முன்தினமும் கன மழை பெய்தது. இந்த மழையினால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. மேலும் மணல்மேடு பகுதியில் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால் அறுவடை செய்ய எந்திரத்துக்கு கூடுதல் செலவாகும்.

அழுகி விடும்

வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியவில்லை என்றால் பயிர் முற்றிலும் அழுகிவிடும். இந்த ஆண்டு பயிர்க்காப்பீட்டு்க்கு பதிவும் இல்லாததால், அரசு பயிர்க்்காப்பீடு தொகையும் கிடைக்காது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்