போக்குவரத்தை சீரமைக்க 300 நவீன மடக்கும் தடுப்பு கம்பிகள்
போக்குவரத்தை சீரமைக்க 300 நவீன மடக்கும் தடுப்பு கம்பிகள்
மதுரை நகரில் போக்குவரத்தை சீரமைப்பதற்காக போலீசார் நிதியிலிருந்து பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகரில் 300-க்கும் மேற்பட்ட நவீன வகை மடக்கும் தடுப்புக் கம்பிகள் வாங்கப்பட்டது. அந்த கம்பிகளை சுமார் 10 அடி வரை நீட்டி கொள்ளவும், அதனை எழுதாக மடக்கி வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை நகரில் உள்ள 10 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், 30 தடுப்பு கம்பிகள் வழங்கப்பட்டது. மதுரை டவுன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு வழங்கிய தடுப்பு கம்பிகளை பெரியார் பஸ் நிலையம் அருகே சாலையில் குறுக்கே யாரும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து போலீசார் வைத்தனர். எளிதாக உள்ள இந்த தடுப்பு கம்பிகளை ஒரு வழிசாலையில் வாகனங்கள் எதிர்த்து வராத படியும், போக்குவரத்தை சீரமைக்க பல்வேறு இடங்களில் வைக்க உள்ளதாக போக்கவரத்து போலீசார் தெரிவித்தனர்.