300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Update: 2022-12-13 18:40 GMT

மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் ஏராளமான சாக்கு மூடைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ய முயன்றனர்.அப்போது அந்த 3 பேரும் தப்பி ஓடவே மண்டபத்தை சேர்ந்த நயினாமுகமது(வயது 27) என்பவரை மட்டும் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் கடற்கரையில் போடப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூடைகளில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட பின்பு இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்டதாக கூறப்படுகி்றது.

Tags:    

மேலும் செய்திகள்