கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கோழிகள் கருகி பலி
கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கோழிகள் கருகி பலியாகின.
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி மேல் அளிஞ்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சில ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை சிவராமனின் கோழிப்பண்ணையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பண்ணையில் இருந்த 300 கோழிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் போலீசார் இத்தீவிபத்து குறித்து வழக்குபதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்றதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.