வாகன விதிமுறைகளை மீறியதாக 300 வழக்கு

நெல்லை மாநகர பகுதியில் வாகன விதிமுறைகளை மீறியதாக 300 வழக்கு பதிவு செய்யப்பட்டது

Update: 2022-10-26 22:04 GMT

மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராதம் தற்போது கூடுதலாக விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாகன விதி மீறல் வழக்குகள் பதிவு செய்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டி சென்ற நபர்கள் 25 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற 150 பேர் மீதும், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த 52 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்த 12 பேர் மீதும், மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீறியதாக 61 பேர் மீதும் ஆக மொத்தம் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். நேற்று இரவுமுதல் விடிய விடிய வாகன சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்