வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்கச் சாவடி வழியாக வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையினர் நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுங்கச் சாவடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் லாரி ஒன்று வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது மறைந்திருந்த லாரி டிரைவர் உள்பட இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து 30 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.