ரூ.30 ஆயிரம் செம்பு கம்பி திருட்டு
வேதாரண்யம் அருகே ரூ.30 ஆயிரம் செம்பு கம்பி திருட்டு; சிறுவன் உள்பட 2 பேர் கைது/
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி பகுதியில் உள்ள ஒரு உப்பு உற்பத்தி நிறுவனத்தில், இரண்டு கொட்டகைகள் அமைத்து அதில் தளவாட சாமான்களை வைத்து பூட்டியிருந்தனர். சம்பவத்தன்று மர்ம நபர்கள் அந்த பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்பு கம்பிகளை திருடி சென்று விட்டதாக அங்கு பணிபுரியும் கருப்பம்புலத்தை சேர்ந்த சேகர் என்பவர் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேத்ரின் எஸ்தர் வழக்குப்பதிவு செய்து, தனிப்பிரிவு போலீசார் உதவியுடன் செம்பு கம்பிகளை திருடிய அகஸ்தியன்பள்ளி பூவன்தோப்பு பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.