மது குடிப்பதற்கு இடம் கொடுத்த கடைக்காரர்கள் 30 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் மது குடிப்பதற்கு இடம் கொடுத்த கடைக்காரர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-12 17:45 GMT

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகள் அருகே தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பொதுவெளியில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் மது அருந்தும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க 18 நேரடி சப்-இன்ஸ்ெபக்டர் தலைமையில் 50 காவலர்களை கொண்ட குழு அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அக்குழுவினர் இன்று மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் அருகே உள்ள கடைகளில் மது குடிப்பதற்கு இடம் அளித்த கடைகாரர்கள் மற்றும் உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக நின்று குடித்தவர்கள் என ஒரே நாளில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

மேலும் போலீசார் திடீரென அதிரடியாக கடைகளில் சோதனை செய்த போது மது குடித்து கொண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஒடினர்.

அவர்களை போலீசார் துரத்தி கைது செய்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்