கல்லறை தோட்டத்தில் தேனீக்கள் கொட்டி 30 பேர் காயம்

கரூர் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சென்றபோது கல்லறை தோட்டத்தில் தேனீக்கள் கொட்டி 30 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-10 18:32 GMT

தேனீக்கள் கொட்டின

கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் தென்னிலை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்றனர்.

அப்போது கல்லறை தோட்டத்தில் வேப்பமரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் திடீரென பறந்து வந்தன. ேதனீக்கள் அந்தோணிசாமியின் உறவினர்களை துரத்தி, துரத்தி கடித்தன. இதனால் அந்தோணிசாமியின் உடலை அங்கேயே வைத்துவிட்டு அவர்கள் அலறி அடித்து கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

30 பேர் காயம்

இதில் தேனீக்கள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசாருக்கும், அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து அந்தோணிசாமியின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்