கதண்டுகள் கடித்து 6 சிறுவர்கள் உள்பட 30 பேர் படுகாயம்

கபிஸ்தலம் அருகே கோவில் திருவிழாவில் கதண்டுகள் கடித்து 6 சிறுவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-12 21:00 GMT

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே கோவில் திருவிழாவில் கதண்டுகள் கடித்து 6 சிறுவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

கதண்டுகள் கடித்தது

கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் ஊராட்சி வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது. இதை முன்னிட்டு திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆறு பாலம் அருகில் அரச மரத்தடியில் இருந்து பால் குடம், காவடி எடுத்து செல்ல பக்தர்கள் அங்கு அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு வாணவெடிகள் வெடிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரசமரம், மாமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அங்கிருந்த பால்குடம் எடுக்க காத்திருந்த பக்தர்களை கடித்தது.

30 பேருக்கு சிகிச்சை

இதில் சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த சதாசிவம் மகன் சச்சின் (வயது17), ஜெய் சிங் (46), இவரது மகள்கள் சாதனா (12), சசிமிதா (8), ஜெயஸ்ரீ (5), பிரசாத் மகன் ஹரிஹரன் (8), ஷங்கர் மகன் ஜெயக்குமார் (18), சுந்தர்ராஜ் மகன் பாலமுருகன், சுப்பிரமணியன் மகன் தினேஷ் குமார்(22) உள்பட 30 பேரை கதண்டுகள் கடித்து படுகாயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து அனைவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 30 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். .

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்