பழுதான லாரியால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் ஒழுகினசேரியில் பழுதான லாரியால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில்,
மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று மாலை ஒரு சரக்கு லாரி புறப்பட்டது. லாரி நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் அருகே வந்தது. அப்போது லாரி திடீரென பழுதாகி நின்றது. டிரைவர் பலமுறை முயற்சி செய்தும் லாரியை இயக்க முடியவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதாவது ஒழுகினசேரியில் இருந்து வடசேரி வரையிலும், ஒழுகினசேரியில் இருந்து நான்கு வழிச்சாலை வரை என இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஒழுகினசேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழுதான லாரியை பொதுமக்கள் உதவியுடன் சாலையோரம் தள்ளி சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனால் ஒழுகினசேரி பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.