30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-22 15:48 GMT

திண்டுக்கல் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

அதன்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேலு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், செல்போன் கடைகள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 5 கடைகளில் பார்சல் மடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகள் என 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்