3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-07-21 20:14 GMT

நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி (வயது 26). தெற்கு வள்ளியூர் முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (33). இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, நாராயண மூர்த்தி, முருகேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதே போல் சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் மகன் நவாஸ்கான் (36). இவர் சுத்தமல்லி போலீசாரால் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், நவாஸ்கானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்