சாராயம் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Update: 2023-02-19 18:45 GMT

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு ஆற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 4 மோட்டார் சைக்கிள்களை வழிமறித்தனர். அப்போது ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22), தவமணி(19), அஜித்(20) என்பதும் தப்பி ஓடியவர் மல்லாபுரம் முத்துராமன் என்பதும் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொியவந்தது. இதையடுத்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயத்துடன் 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துராமனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்