2½ கிலோ கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
2½ கிலோ கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கந்தர்வகோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை முனியன் கோவில், புதிய பஸ் நிலையம், அக்கட்சிப்பட்டி கருப்பர் கோவில் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அக்கச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் நவீன் குமார் (வயது 25), சுப்ரமணியன் மகன் விக்னேஸ்வரன் (25), ஞானப்பழம் மகன் ஆனந்தராஜ் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.